Tuesday 31 December 2019

ஐயா Resolutionனா என்னங்கய்யா? Welcome to வல்லரசு இந்தியா 2020

"மொத்தம் 12 மாசம்மா.. நிறைய பிரச்சன ..மூச்சுத் திணற திணற வச்சு செஞ்சுச்சு..சரி செஞ்சுட்டு போங்கன்னு விட்டுட்டேன்"
"என்னது விட்டுட்டீங்களே...? நீங்க எதுமே செய்யலையா!?"
"அதுக்குள்ள தான் அடுத்த பிரச்சினை வந்துருச்சே"


But it made me a believer
 but it made me a believer
.
2019 ஒரு பல விஷயங்கள் நல்லது கெட்டது ன்னு நடந்திருக்கு.. ஆனா அதெல்லாம் மறந்துட்டு New yearஅ
வெல்கம் பண்ண தயாராகிட்டோம்.

Happy New yearன்னு பாட்டு பாடிக்கிட்டு கமல் பைக்கில் வர...,அத எடுத்து நாம  statusல ட்ரெயின் விட்டு, ஒரே Messageஅ டைப் பண்ணி ஊருப்பூரா அனுப்பி forward பண்ணலாம்.
New yearக்கு dress எடுக்காம  கூட இருந்துரலாம், ஆனா Resolution எடுக்காம எப்படி...?

‌ ஆமா Resolution னா என்னங்கய்யா?

நம்ம ஊர் அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்துல அடிச்சவுட்ற மாதிரி It's our turn..

Resolution பாவங்கள்

இந்த வருஷத்துல குடிக்கமாட்டேன்,
Cigarette அடிக்க மாட்டேன் அப்டினா உடம்புக்கு நல்லது ட்ரை பண்ணுங்க பாஸ்...

Arrears கிளியர் பண்ணுவேன் அப்புடினா ,வாழ்த்துக்கள் ஜி. அதுக்குன்னு "இனி யாரையும் engineering படிக்கவிட மாட்டேன் "
அப்படிலாம் சொல்லக் கூடாது
இன்னிக்கி எல்லா fieldலயும் topல இருக்கிறவயேல்லாம்  யாரு ?
பூரா நம்ம பையன் தான்...

அப்புறம்  சின்னபுள்ள தனமா
 பொய் சொல்ல மாட்டேன்
Sunny Leoneன சந்திக்க மாட்டேன்
Mia Khalifaவ மீட் பண்ண மாட்டேன்
 அப்படின்னுலாம் Resolution எடுத்தா போங்க பாஸ் சிரிப்பு காமிச்சுக்கிட்டு..

பயப்படாதீங்க.. அந்த நியூஸ் உங்களுக்கு தப்பா convey  ஆகிருக்கு ..
 child pornography தான்illegal.
Meme creatorsயும்  concept சிக்கிருச்சுன்னு  memes போட்டு டென்ஷன் ஏத்திவிட்டாங்க...
You too Brutus..?

Gym:
New year resolutionனா gym  போன யாரும் அதை strictஅ  follow பண்ணதில்லை அப்படின்னு statistics சொல்லுது. சரித்திரத்தை மாற்றி எழுத வேண்டிய பொறுப்பு உங்ககிட்ட இருக்கு.. be careful

Singles எல்லாம் committed ஆக Resolution எடுங்க
Morattu  singles நீங்கள் ஏதாவது முயற்சி எடுங்க.. வயசு போயிட்டே இருக்குல்ல..ஒண்ணு கல்யாணத்த பண்ணுங்க இல்ல கைலாசாவுக்கு டிக்கெட் போடுங்க...
But please
Status போட்டு சாகடிக்காதீங்க...

அப்புறம்New year wish என்ற பேர்ல English ல பக்கபக்கமா type பண்ணி அனுப்பறவங்களுக்கு... போதும் பாஸ்
 Am I joke to you..?

New year னா
calendar ஒருநாள் மட்டும்  கலரா மாறும்
 friend list இருக்கிறானா அப்டினு நினைக்கிற friend எல்லாம் message பண்ணுவான்.
ஆனா உங்கLifeல நீங்க மாறாமல் எதுவும் மாறாது
நீங்க  நம்பலனாலும் அதான் நெசம்..!

Resolution எடுக்கிறது நல்ல விஷயமா இருந்தா , எதுக்கு New yearவர்ற வரை வெயிட் பண்ணிக்கிட்டு டக்குனு செயலில் இறங்கிய வேண்டியதுதானே..

Resolution எடுக்கிறது முக்கியமான விஷயமா இருக்கணும்... அப்புறம் அத follow பண்ண முடியுமா என்ன முன்னாடியே பாத்துக்கோங்க ( Amazon ல shopping பண்ணிட்டு அண்ணாச்சி கடையில calendar கேட்டா எப்படி?)

இதையெல்லாம் தாண்டி series அ resolution எடுத்து follow பண்ண முடியலைன்னா கவலையை விடுங்க பாஸ்
நம்ம நாடே கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி ஒரு resolutionஎடுத்துச்சு...


 வல்லரசு 2020

"Wait kalam sir .‌ நாங்க குடியுரிமை எல்லாம் கொடுத்துட்டு டைம் இருந்தா பார்க்கிறோம்...."
We are very sorry Kalam sir
     Proudly Indians
Happy_New year
           நெடுஞ்சாலைநிழல்
            அரவிந்த் ரகு

Wednesday 13 November 2019

அசுரன் ஒரு புரிதல் (Understanding Asuran)

               அசுரன் ஒரு புரிதல்
            (Understanding Asuran)

"ஒரே மண்ணுல பொறக்குறோம்
ஒரே மொழிய பேசுறோம்
இது ஒன்னு போதாதா எல்லாரும் சேர்றதுக்கு...?"

ஒரு காலத்தில் மக்கள் குழுக்களாக பிரிந்து, அவரவர் வசித்த இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப தொழில்களை மேற்கொண்டனர். அத்தொழிலே அவர்களின் அடையாளமாக மாறி, "சாதி" என ஆகிவிட்டது. பின்,"மேல்சாதி ","கீழ் சாதி" என பிரிந்து மனித இனத்தின் மீது மனிதனே வேற்றுமை பாராட்டி, தள்ளி வைத்து, வஞ்சம் கொண்டு பல்வேறு கொடுமைகளை ஏவினான்.
என்று தொடங்கியது என தெரியவில்லை, இன்னும் தொடர்கிறது.....
      "தீண்டாமை ஒரு பாவச்செயல்" "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என  பெயருக்கு கற்பித்துவிட்டு, சாதியத்தின் அடையாளங்களை, கூறுகளை அடுத்த தலைமுறைக்கு சத்தமில்லாமல் கடத்தி கொண்டிருக்கிறோம்.

 தமிழகத்தில், பெரியார் &திராவிட இயக்கங்களினால் சாதிய ஒடுக்குமுறைகள் பெருமளவில் குறைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.  அதேநேரத்தில் முற்றும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை.

நம்மில் பலர் "இட ஒதுக்கீட்டை" ஒழித்துவிட்டால், சாதி ஒழிந்துவிடும் என்பார்கள். இது இட ஒதுக்கீட்டின் வரலாற்றை,  அவசியத்தை ஆராயாமல், தெரியாமல் பேசுபவரின் மேம்போக்கான பேச்சாகும்.

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் பெரும் மதிப்புடையவராக,சொத்து உடையவராக இருப்பார்‌. அவர் கம்பீரமாக உடையணிந்து வீட்டைவிட்டு வெளியேறும்போது நான்கு படிகள் கீழே நின்று ஒரு கூட்டமே கூழைக் கும்பிடு போட்டு "எஜமான், சாமி" என்று அழைக்கும். எப்போதும் அந்த படி மேல் நிற்பவரின் கதை பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இப்போது சினிமா மெல்ல  மாறி, கீழே நிற்பவரின் கதையை பேச ஆரம்பித்திருக்கிறது. எல்லோருக்கும் கதை இருக்குமல்லவா?

இந் நிலைமையை பார்த்து சிலர் கோபப்படுகிறார்கள். இன்னும் சிலர்  "இப்ப எங்கப்பா சாதி எல்லாம் இருக்கு? முதல்ல இதப் பத்தி பேசுறதே, படம் எடுக்கிறத நிறுத்துங்க அப்பதான் ஒழியும் "என்கிறார்கள். அவர்களுக்கு நாம் முன்வைக்கும் கேள்வி

மணக்கோலத்தில் மணமக்கள் துடிக்க துடிக்க வெட்டிக் கொலை;
இறந்தபின் புதைக்க இடம் தர மறுத்ததால்  பிரச்சனை;
உடன் படிக்கும் மாணவன் முதுகில் பிளடால் கீறிய சகமாணவன்
என்ற செய்திகள் எல்லாம் படித்துவிட்டு, அதற்கு காரணம்" சாதி" என்று தெரிந்த பின்பும் எப்படி  உங்களால் இப்படி பேச முடிகிறது....?

மொத்தத்தில் சாதி குறித்தான புரிதல், அதன் கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் மிகக்குறைவாக உள்ளது. அதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் சினிமா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இங்குதான் அவசியம் ஆகிறான் அசுரன்



சாதி எப்படி ஒருவரை அடிமைப்படுத்தி விட முடியும்? எந்த வகையில் அடிமைப்படுத்த முடியும்? என்று கேட்பவர்களுக்கு சாதியின் தீவிரத்தை, நான்கே காட்சிகளில் "நச்சென்று" புரிய வைத்து விடுகிறார் வெற்றிமாறன்.


சோத்துக்கு கூட வழியில்லாமல் இருக்கும் ஒருவரை தனுஷ்(சிவசாமி) தன் முதலாளியிடம் சொல்லி வேலைக்கு சேர்த்து விடுவார்.
வேலை சேர்ந்த ஆள் ,முதல் நாள்  முதலாளிக்கு செருப்பு துடைப்பார்.  மூன்றாம் நாள்,  செருப்பு துடைக்கப்படும் , ஆனால் துடைப்பவர் வேறொரு ஆள், அவருக்கு பக்கத்தில் பேண்ட் சட்டையோடு நின்றபடி உத்தரவு பிறப்பிப்பான் தனுஷ்  வேலைக்கு சேர்த்துவிட்ட ஆள். அவனே,
பின்னாளில்   தனுஷை  எதிர்த்து பேசுவான், கைகலப்பில் ஈடுபடுவான், துன்புறுத்துவான், தனுஷின் குடும்பத்தை கொள்வான்.


சோத்துக்கு வழியில்லாமல், உடுத்த துணி இல்லாமல் வேலைக்கு சேர்ந்தவனுக்கு, உழைக்காமலேயே கிடைக்கும் பதவி உயர்விற்கான காரணமும் & தன்னை வேலைக்கு சேர்த்துவிட்டவனையே  எதிர்த்து நிற்பதற்கான  துணிவும்   அதிகாரமும் தான் சாதி.
(இவ்வளவு தெளிவான காட்சியமைப்புக்கு நன்றி வெற்றிமாறன்.)


படம் இன்னும் பல்வேறு களங்களை அப்படியே காட்சிப்படுத்தி, வரலாற்றை கண் முன் நிறுத்துகிறது .
அவற்றில் சில....

பஞ்சமி நிலம் மீட்பு

நிலம் ஒவ்வொருவரின் அதிகாரம். ஒருவருக்கு நிலம் கிடைத்துவிட்டால், அதைக்கொண்டு அவர் வாழ்வில் சுயசார்பு முன்னேற்றத்தை எய்த முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு, " நிலம்" முதலிய அடிப்படை தேவைகள் எதையும் அடைய விடாமல், அவர்கள் எந்த விதத்திலும் முன்னேறிவிட கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது மற்றொரு குழு. இழந்த உரிமையை திரும்பி கேட்கும் போது, அதை தடுக்க அவர்கள் எந்த எல்லைவரை போகிறார்கள் என்பதை பதிவு செய்து,நிலத்தின் மீதான  அதிகார வன்மம் சொல்லப்பட்டிருக்கிறது.

செருப்பு

சாதாரணமாக காலில் அணியும் செருப்பு கூட அணிய முடியாமல், மீறி அணிந்தால் அவமானப் படுத்தப் படுவது

நிலம் குடும்பம் கொலை

பிற்கதையில், சிவசாமி (தனுஷ்) வேறொரு ஊரில் யார் வம்புக்கும் போகாமல் ,விவசாயம் செய்துகொண்டு ,"தான் உண்டு, தன் குடும்பம் உண்டு "என்று வாழ்ந்து கொண்டிருப்பார். பெரிய பணக்காரர் (வடக்கூரான் )சுற்றியுள்ள இடத்தையெல்லாம்  வளைத்து போட, எஞ்சியிருப்பது சிவசாமியின் நிலம். அதை அடைய வடக்கூரான் சிவசாமி குடும்பத்தின் மீது ஏவும் வன்முறையும், எதிர்த்து நின்று அதற்காக அக்குடும்பம் கொடுக்கும் விலையும் கொடுமையின் உச்சம்.
தன் பிள்ளையை காப்பாற்ற, ஒடுக்கப்பட்ட ஒருவன் , எந்த எல்லைக்கு தள்ளபடுகிறான் என்பதற்கு , ஊர் காலில் தனுஷ் விழும் காட்சியே... சாட்சி.

கல்வி & அதிகாரம்

படத்தில் சிதம்பரம் ,அப்பா சிவசாமியிடம் கேட்பான் "நம்ம அண்ணன கொன்னது வடக்கூரான்னு,  எல்லாருக்கும் தெரியும் அவன் ஜெயிலுக்கு போல..,? நான் அவன கொன்னதுக்கு ,  நம்ம மட்டும் ஏன் பயப்படனும் ?"
அதற்கு சிவசாமியின் பதில் "துட்டு வேணும் லே"
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது ஏவப்படும் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
படம் முழுவதும் கல்வி மற்றும் அதிகாரத்தின் அவசியம் பேசப்பட்டிருக்கிறது. இறுதியில் சிவசாமி தன் மகனிடம் சொல்லும் வசனம்" படி ,அதிகாரத்துக்கு போ போயி அவனுக நமக்கு செஞ்சத,
நீ எவனுக்கும் செய்யாத" இதுதான் அடுத்த தலைமுறைக்கான செய்தி.
படத்தில் சமமாக ஆதிக்க சாதியில் உள்ள நல்லவர்களையும் ,சாதியை ஒழிக்க போராடிய  பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.

வன்முறை

சிலர் ஏன் இவ்வளவு  வன்முறை என்கிறார்கள்.
உங்கள் அன்றாட வாழ்வை வாழ விடாமல் தடுத்தால், உங்கள் வாழ்வையே சூனியம் ஆக்கினால், அந்த சுழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? இவ்வளவு  கொடுமைகளை கடந்து திரையில் அறிவாள் ஏந்தி சிவசாமி வரும்போது "அப்படித்தான் வெட்டி சாய்" என்று பார்வையாளர்கள் பெரும்பாலானோரின் மனம் கத்திருக்கும்.
தனி ஒருவன் தன் நிலத்தை காப்பாற்ற முயலும் போது, காலில் செருப்பு கூட அணிய முடியாத போது, தன் குடும்பமே கண்முன் எரியும்போது, எஞ்சியிருக்கும் தன் குடும்பத்தை காப்பாற்ற முயலும் போது வரும் கோபமே அசுரன். இதை வன்முறை என்ற கூட்டில் அடைத்து விட முடியாது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ் சினிமாவின் ஒரு வரம் .தரமிக்க முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்." வெக்கை" நாவலை படமாக்கத் துணிந்து, அதை சீர்குலைக்காமல், இன்னும் சில உண்மை கதைகளை சேர்த்து, அழகாக கோர்த்து, ஒரு திரைப்படமாக,வாழ்வியலாக, நேர்மையாக, உண்மைக்கு மிக நெருக்கமாக, மிகுந்த கவனத்துடன் படமாக்கியிருக்கிறார்.
படத்தின் கதாபாத்திரங்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். இசை மற்றும் தொழில்நுட்பத் துறைகள் நேர்த்தி. வசனங்களில் கவனிக்க வைக்கிறார் இயக்குனர் .அதுவும் அந்த கடைசி வசனம் "அதி அற்புதம்". சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை உள்ள ஒரு எழுத்தாளராக தடம் பதிக்கிறார் வெற்றிமாறன்.

படத்தின் வெற்றிகள்

1)சாதியத்தை பற்றி தெளிவாக புரிதல் இல்லாத ஒரு தலைமுறைக்கு, சமுதாயத்திற்கு சாதி கடந்து வந்த பாதைகளை அதன் கொடுமைகளை எடுத்துச் சொல்ல அவசியமாகிறது அசுரன்.
2)இந்த கொடுமைகளை பார்த்து, புரிந்து இனி இதுபோல் நடக்கக் கூடாது என்று நல்ல மனங்கள்  பேசிக்கொள்கிறார்கள்.
3)பஞ்சமி நிலம் மீட்பு குறித்து பேச்சு தொடங்கியிருக்கிறது.
4)சிலருக்கு படம் தாங்கிய கருத்துக்களின் மீது கோபம் வந்திருக்கிறது. இதுவும் வெற்றியே. அந்த கோபம் என்பது படத்தில் காட்சிபடுத்தபெற்ற கொடுமைகளுக்கு அவர்களின்  வருத்ததின் வெளிப்பாடே ஆகும்.
இவ் வாழ்வியலை "வெக்கையாக" பதிவுசெய்த மூத்த எழுத்தாளர் "பூமணி அவர்களுக்கும்" திரைப்படமாக மாற்றி அனைவரிடமும் கொண்டு சேர்த்த "வெற்றிமாறன் அவர்களுக்கும் "காலமும் ,இம் மண்ணும் தலை வணங்கும். அசுரன் ஒரு வரலாற்றுப் பதிவு.

இப்படைப்பிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது.‌‌..(புரிதல்)

இம்மண்ணில் இல்லாத ஒரு மாயை- சாதியை முன்னிறுத்தி கொடுமைகள் நடக்கும் வரை, கடைசி ஒருவன் பாதிக்கப்படும் வரை அசுரன், பரியேறும் பெருமாள் போன்றவர்கள் எழுந்து வரத்தான் செய்வார்கள்.

 இப்படங்களை பார்த்து என்ன புரிந்துகொள்ள வேண்டுமெனில் நடந்த கொடுமைகளுக்கு வருந்தி, இனி ஒருக்காலும் ஒருவனும் இதுபோல் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமை. அதுவே இப்படைப்புகள் சொல்லவரும் செய்தி.

சாதியம் ஒழிப்போம்; மனிதம் வளர்ப்போம்
        ~ நெடுஞ்சாலை நிழல்~
       @ அரவிந்த் ரகு

Wednesday 19 June 2019

Rain ரெயின் go away # World Cup



நெடுஞ்சாலை நிழல்

19-06-2019

Rain ரெயின் go away ..# worldcup cricket
அரவிந்த் ரகு

இங்கிலாந்து

Rain rain go away

காட்சி 1:

தன் தேசம் விளையாடும் ஒரு கிரிக்கெட் போட்டி தடையின்றி நடக்க ,மழை நிற்க வானத்தை நோக்கி கைகூப்பி மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தான் தேச பக்தியுடன் ஒரு இந்தியன்.!

தமிழ்நாடு

Rain rain come to Tamil Nadu

காட்சி 2:

மழை பொய்த்துப் போய் குடிதண்ணீர் ஒரு வாரம் /பத்து நாட்களுக்கு ஒருமுறை வருவதாக சொல்லி அழுகிறார் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தின் ஏழைத்தாய் கையில் கைக்குழந்தையுடன்....!

இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையிலிருக்கும் தூரத்தை ,துயரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.




credit:Fb-perform panna vidunga da

இந்தியா நியூசிலாந்து

இடையேயான போட்டி மழையினால் தடைபட இந்திய வீரர் கேதார் ஜாதவ் rain rain go to Maharashtra என வானத்தைப் பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்தார். (அதே நிலைமை தான் நமக்கும்...)

தமிழ்நாட்டில் பரவலாக தண்ணீர் பஞ்சம் தலை தூக்கி உள்ளது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் சராசரி மனித வாழ்க்கையை பெருமளவில் பாதித்து இருக்கிறது.தண்ணீருக்காக மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். "ஐடி கம்பெனிகள் மூடல் ஹோட்டல்கள் மூடல்" என செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சென்னையில் உள்ள பிரச்சினைகள் பெரும் அளவில் பேசப்பட,ஓரளவு அரசால் கவனிக்கப்படுகிறது. சென்னை தாண்டிய பல வறட்சி கிராமங்களின் நிலைமை இன்னும் மோசம்.அங்கு உள்ள தண்ணீர் பஞ்சம் கவனிக்கப்படவில்லை.

((News 18 தொலைக்காட்சியில் "தண்ணீர் கண்ணீர்" என்ற தலைப்பில் தண்ணீர் பஞ்சம் குறித்து நீண்ட நேரம் ஒளிபரப்பினர். அது மூலமே நமக்கும் இந்த செய்தி சரியாகதெரிய வந்தது. இக்கட்டுரையின் தூண்டுதல் அதுவே -பாராட்டுக்கள்))




ராமநாதபுரம்

அங்குள்ள மக்கள் குடிதண்ணீர் ஒரு வாரம் /பத்து நாட்களுக்கு ஒருமுறை வருவதாக சொல்கிறார்கள்.

பத்து நாட்களுக்கு ஒரு குடும்பத்தின் தேவைக்கு எவ்வளவு நீர் சேமித்து வைக்க முடியும் ?எப்படி சேமித்து வைப்பது?

குடிநீர் ஒரு குடம் 12 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். குடிநீர் இப்படி என்றால் குளிக்க, துவைக்க??

குழந்தைகள் வைத்துள்ள குடும்பங்கள் கோடைக்காலத்தில் சந்திக்கும் அவலங்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

நீர் மனிதனின் இன்றியமையாத அடிப்படைத் தேவை. தண்ணீர் பஞ்சம் இன்று மனிதனை அன்றாட வேலைகளை விட்டுவிட்டு நீரை தேடி ஓட வைத்துருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நீருக்காக போர்க்களம் வெடிக்கும்.

யார் காரணம் ?

மழைக்காலங்களில் நீரை சேமிக்காமல் வீணாக்கிய, தண்ணீர் இருந்த காலங்களில் தேவையில்லாமல் வீணடித்த நாம்தான்.

என்ன செய்யலாம்?

முதலில் இது போன்ற பெரிய பிரச்சினைகளில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் தனி மனிதன் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட நீண்டகால தீர்வு ஏற்படுத்த முடியும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட நாம் அனைவரும் தான் காரணம் இயற்கையின் அழிவு என்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம். தீர்வை நோக்கி அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய தருணம் இது.

தண்ணீர் என்பது யாருடைய சொத்து இல்லை. இயற்கையின் வரப்பிரசாதம். நம்மிடம் இருப்பதால் தண்ணீரை வீணாக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகளுக்கு நம்மால் நேரடியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யலாம் அதுவே மனித நேயம்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட நாம் அனைவரும் தான் காரணம் .

1.இன்னும் நீர் பெற்றுக் கொண்டிருக்கும் பெரும் நிறுவனங்கள் வீடுகள் தண்ணீரை முடிந்தவரை சிக்கனமாக செலவு செய்யலாம்.

(இன்னும் நீர் பெற்றுக் கொண்டிருக்கும் ஊர்களும் நகரங்களும்)

2 .நாம் எதார்த்தமாக பல்துலக்கும் போது பாத்திரம் கழுவும் போது வீணாக செலவு செய்யும் தண்ணீரை பாதுகாக்கலாம்.

3 .எதிர்வரும் மழைக்காலத்திற்கு தயார் செய்யும் விதமாக அவரவர் ஊர்களில் எஞ்சியுள்ள குளம் குட்டை போன்ற நீர் ஆதாரங்களை அரசு எதிர்பார்க்காமலே தூர் வாரலாம்.

மேலும் மரம் நடுதல், நீர் தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,

மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள்- குறிப்பாக வீட்டை சுத்தி சிமெண்ட் தரை அமைக்காமல் மண் தரையை விட்டு விடுவது போன்றவற்றை செய்யலாம்.

கட்டற்ற சக்தி கொண்ட பேராற்றல் இயற்கை அதை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம் இதுவே இயற்கை நமக்கு உணர்த்துவது

கண்ணீரையும் குடிக்கும் காலம் வரவிருக்கிறது‌. தண்ணீருக்காக நம் கண்முன் மனித இனம் அழியாமல் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் மாற்றம் இப்போதைய தேவை.

யாருக்கு தெரியும் உங்கள் வீட்டு சமையலறை மூலையில் பைபில் ஒழுகிக் கொண்டிருக்கும் அந்த சொட்டுநீர் எங்கேயோ அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் உயிர் துளியாகவும் இருக்கலாம்

ஒன்றுபடுவோம் மனிதநேயம் கொள்வோம் மனித இனம் காப்போம்

இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசுத் தரப்பு
credit: third party image reference

அரவிந்த் ரகு

காதல் எனப்படுவது யாதெனில்..!

  ( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...