Wednesday 19 June 2019

Rain ரெயின் go away # World Cup



நெடுஞ்சாலை நிழல்

19-06-2019

Rain ரெயின் go away ..# worldcup cricket
அரவிந்த் ரகு

இங்கிலாந்து

Rain rain go away

காட்சி 1:

தன் தேசம் விளையாடும் ஒரு கிரிக்கெட் போட்டி தடையின்றி நடக்க ,மழை நிற்க வானத்தை நோக்கி கைகூப்பி மனமுருக வேண்டிக் கொண்டு இருந்தான் தேச பக்தியுடன் ஒரு இந்தியன்.!

தமிழ்நாடு

Rain rain come to Tamil Nadu

காட்சி 2:

மழை பொய்த்துப் போய் குடிதண்ணீர் ஒரு வாரம் /பத்து நாட்களுக்கு ஒருமுறை வருவதாக சொல்லி அழுகிறார் தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தின் ஏழைத்தாய் கையில் கைக்குழந்தையுடன்....!

இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையிலிருக்கும் தூரத்தை ,துயரத்தை தெரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.




credit:Fb-perform panna vidunga da

இந்தியா நியூசிலாந்து

இடையேயான போட்டி மழையினால் தடைபட இந்திய வீரர் கேதார் ஜாதவ் rain rain go to Maharashtra என வானத்தைப் பார்த்து கெஞ்சிக் கொண்டிருந்தார். (அதே நிலைமை தான் நமக்கும்...)

தமிழ்நாட்டில் பரவலாக தண்ணீர் பஞ்சம் தலை தூக்கி உள்ளது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் சராசரி மனித வாழ்க்கையை பெருமளவில் பாதித்து இருக்கிறது.தண்ணீருக்காக மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் போராடத் தொடங்கி இருக்கிறார்கள். "ஐடி கம்பெனிகள் மூடல் ஹோட்டல்கள் மூடல்" என செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சென்னையில் உள்ள பிரச்சினைகள் பெரும் அளவில் பேசப்பட,ஓரளவு அரசால் கவனிக்கப்படுகிறது. சென்னை தாண்டிய பல வறட்சி கிராமங்களின் நிலைமை இன்னும் மோசம்.அங்கு உள்ள தண்ணீர் பஞ்சம் கவனிக்கப்படவில்லை.

((News 18 தொலைக்காட்சியில் "தண்ணீர் கண்ணீர்" என்ற தலைப்பில் தண்ணீர் பஞ்சம் குறித்து நீண்ட நேரம் ஒளிபரப்பினர். அது மூலமே நமக்கும் இந்த செய்தி சரியாகதெரிய வந்தது. இக்கட்டுரையின் தூண்டுதல் அதுவே -பாராட்டுக்கள்))




ராமநாதபுரம்

அங்குள்ள மக்கள் குடிதண்ணீர் ஒரு வாரம் /பத்து நாட்களுக்கு ஒருமுறை வருவதாக சொல்கிறார்கள்.

பத்து நாட்களுக்கு ஒரு குடும்பத்தின் தேவைக்கு எவ்வளவு நீர் சேமித்து வைக்க முடியும் ?எப்படி சேமித்து வைப்பது?

குடிநீர் ஒரு குடம் 12 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். குடிநீர் இப்படி என்றால் குளிக்க, துவைக்க??

குழந்தைகள் வைத்துள்ள குடும்பங்கள் கோடைக்காலத்தில் சந்திக்கும் அவலங்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

நீர் மனிதனின் இன்றியமையாத அடிப்படைத் தேவை. தண்ணீர் பஞ்சம் இன்று மனிதனை அன்றாட வேலைகளை விட்டுவிட்டு நீரை தேடி ஓட வைத்துருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் நீருக்காக போர்க்களம் வெடிக்கும்.

யார் காரணம் ?

மழைக்காலங்களில் நீரை சேமிக்காமல் வீணாக்கிய, தண்ணீர் இருந்த காலங்களில் தேவையில்லாமல் வீணடித்த நாம்தான்.

என்ன செய்யலாம்?

முதலில் இது போன்ற பெரிய பிரச்சினைகளில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும் தனி மனிதன் வாழ்க்கை முறை மாற்றத்தினால் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட நீண்டகால தீர்வு ஏற்படுத்த முடியும்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட நாம் அனைவரும் தான் காரணம் இயற்கையின் அழிவு என்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம். தீர்வை நோக்கி அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய தருணம் இது.

தண்ணீர் என்பது யாருடைய சொத்து இல்லை. இயற்கையின் வரப்பிரசாதம். நம்மிடம் இருப்பதால் தண்ணீரை வீணாக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகளுக்கு நம்மால் நேரடியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யலாம் அதுவே மனித நேயம்.

இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட நாம் அனைவரும் தான் காரணம் .

1.இன்னும் நீர் பெற்றுக் கொண்டிருக்கும் பெரும் நிறுவனங்கள் வீடுகள் தண்ணீரை முடிந்தவரை சிக்கனமாக செலவு செய்யலாம்.

(இன்னும் நீர் பெற்றுக் கொண்டிருக்கும் ஊர்களும் நகரங்களும்)

2 .நாம் எதார்த்தமாக பல்துலக்கும் போது பாத்திரம் கழுவும் போது வீணாக செலவு செய்யும் தண்ணீரை பாதுகாக்கலாம்.

3 .எதிர்வரும் மழைக்காலத்திற்கு தயார் செய்யும் விதமாக அவரவர் ஊர்களில் எஞ்சியுள்ள குளம் குட்டை போன்ற நீர் ஆதாரங்களை அரசு எதிர்பார்க்காமலே தூர் வாரலாம்.

மேலும் மரம் நடுதல், நீர் தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,

மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள்- குறிப்பாக வீட்டை சுத்தி சிமெண்ட் தரை அமைக்காமல் மண் தரையை விட்டு விடுவது போன்றவற்றை செய்யலாம்.

கட்டற்ற சக்தி கொண்ட பேராற்றல் இயற்கை அதை அழிப்பது நம்மை நாமே அழிப்பதற்கு சமம் இதுவே இயற்கை நமக்கு உணர்த்துவது

கண்ணீரையும் குடிக்கும் காலம் வரவிருக்கிறது‌. தண்ணீருக்காக நம் கண்முன் மனித இனம் அழியாமல் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் மாற்றம் இப்போதைய தேவை.

யாருக்கு தெரியும் உங்கள் வீட்டு சமையலறை மூலையில் பைபில் ஒழுகிக் கொண்டிருக்கும் அந்த சொட்டுநீர் எங்கேயோ அழுதுகொண்டிருக்கும் குழந்தையின் உயிர் துளியாகவும் இருக்கலாம்

ஒன்றுபடுவோம் மனிதநேயம் கொள்வோம் மனித இனம் காப்போம்

இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் தண்ணீர் பஞ்சம் தமிழ்நாட்டில் இல்லை என்று அரசுத் தரப்பு
credit: third party image reference

அரவிந்த் ரகு

காதல் எனப்படுவது யாதெனில்..!

  ( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...