Sunday 14 February 2021

காதல் எனப்படுவது யாதெனில்..!

 

(Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது,
சரியாகவும் இருக்காது. இக்கட்டுரை   எழுதியவரின் புரிதலில், காதலைப் பற்றியான பார்வை, உளவியல் & சமூகம் சார்ந்த அலசல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மாற்றுக்கருத்துள்ளவர்கள் கருத்தை பதிவு செய்யலாம் )

காதல்

காதல் என்பதை நீங்கள் எப்படி சொன்னாலும், எப்படி புரிந்து கொண்டிருந்தாலும் அதன் அடிப்படை அன்பே. ஆக காதல் ஒரு "பேரன்பு".

நீங்க அன்பு ஜெயிக்கும்னு நம்புறீங்களா..? அப்ப Continue....!!





காதல் எனப்படுவது..

காதல் என்று ஒன்று தனியாக இல்லை.அன்பின் ஒரு வெளிப்பாடுதான் அது.
நம் வாழ்வின் நீண்ட நாள் தேவைக்கான அன்பின் பெயர்தான் காதல்.காதலிப்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒருவர் இன்னொருவருடன் எப்படி  பழக முடியும் என்பதே ஆச்சர்யமளிக்கிறது.
இப்படி சொல்வதால் காதலை எதிர்ப்பதாக அர்த்தமில்லை. மனித வாழ்வின் அத்தனை வேறுபாடுகளையும் அன்பால் தான் கடக்க முடியும் என நம்புகிறேன்.

அன்பே பேரன்பே



புரிதல்

இங்கு ஒவ்வொருவரும் தனித்த இயல்புடையவர்களே.ஒருவரை இன்னொருவர் முழுமையாக புரிந்து கொள்வதெல்லாம் சாத்தியமில்லை.
ஆனால், அவரவரின் நிறை,
குறைகளோடு ஏற்றுக்கொள்ளலாம்.அப்படி ஏற்றுக் கொண்டு வாழ்வில் பயணப்படுவதை காதல் என புரிந்துக்கொள்ளலாம்.

காதல் காரணங்கள் :

தனிமை ...!

இவ்வுலகில் வாழும் நாம் எல்லோருமே தனித்தனி தான்  பிறப்பிலும் இறப்பிலும்...
வாழ்விலும் பல நேரங்களில் துணையிருப்பது தனிமையே.
சமயங்களில்,தனிமை மிகக்கொடூரமானது .
பல சிக்கல்கள் நிறைந்த வாழ்வை தனியாக கடப்பது சிரமம்.
சக மனிதர்களோடு பேசுவதும் பழகுவதும் தானே இவ்வாழ்வின் நோக்கமும் அழகியலும்...!
இங்கு வாழும் ஒவ்வொரு ஜீவனும் இன்னொரு ஜீவன் மேல் அன்பு கொண்டு, கைகளைப் பற்றித்தான் வாழ்வென்னும் ஆற்றை கடக்க இயலும்.



பருவ மாற்றம்

குழந்தைகளாய் வளரும்போது, நமக்கென்று தனியாக விருப்பு வெறுப்புகள் இருக்காது.நம் பேச்சுகள், பகிர்வுகள் பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களுடன் முடிந்துவிடும்.

குறிப்பிட்ட வயது வந்தவுடன், மனமுதிர்ச்சி வந்தவுடன், சுயமாக யோசிக்கத் தொடங்கியவுடன்,
நமக்கென்று தனியாக பிரச்சினைகள் வந்தவுடன், அதையெல்லாம் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு வீட்டிற்குள் இல்லாமல் போகலாம் .அந்தக் கட்டத்தில் பெரும்பாலும் தோன்றுவதைப் பகிர்வதற்கும், அவ்வப்போது ஆறுதல் தேடுவதற்கும் நண்பர்கள் கூட்டத்தையே நாடுவோம்.அப்படி நாம்  சொல்வதை கேட்கிற ,அதை வைத்து நம்மைப்பற்றிய எந்தவித பிம்பமும் கட்ட முயலாத நண்பர்கள் அனைவருமே வாழ்க்கையில் ஸ்பெஷல் தான்.

காதலும் நட்பும்

ஆண் -பெண் சுவராஸ்யமானது.
எல்லா நட்பும் காதலில்லை . ஆனால்,காதலின் வேர் பெரும்பாலும் நட்பாகத்தான் இருக்கும்.
ஒருவரிடம் பேசி ,பழகி, பரஸ்பரம் தெரிந்துகொண்டு புரிதலின் அடிப்படையில் வரும் காதலே நிலைத்துநிற்கும்.



எதெல்லாம் காதல் இல்லை ...?

சினிமா காதல்

சினிமா தெரிந்தோ தெரியாமலோ காதல் குறித்த பல தவறான புரிதலை உருவாக்கியுள்ளது.

அவற்றில் சில..
பார்ப்பது,சிரிப்பது,தொடுவது, பக்கத்தில் உட்காருவது, பஸ்ஸில் டிக்கெட் எடுத்து கொடுப்பது எல்லாம் காதலில் சேராது.அவையெல்லாம் இயல்பாக நடக்கும் விஷயங்கள் (அ) சக மனிதனுக்கு செய்யும் உதவிகள்.

Update ஆகுங்க பாஸ்..
இது android காலம்




காதல் complications ;
Physical appearance/தோற்றம்

(Love at first sight என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை)
காதலுக்கு தோற்றமும் ஒரு காரணியாக இருக்கலாம்.ஆனால் அதை மட்டுமே காரணமாக வைத்து வருவது காதல் எப்படி சரியாக இருக்கும்..?

Love is  life

காதலும் வாழ்வின் ஒரு பகுதியே.
அது மட்டுமே வாழ்வல்ல.
காதல் மீது புனிதப்பட்டம் கட்ட முயல்வதும் தேவையில்லாத ஒன்று.

சினிமாவில் காட்டப்படுவதைப் போல குறிப்பிட்ட பருவத்தில்
ஒவ்வொருவரும் காதலித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை.Single அல்லது commited ஆக பிழை ஒன்றுமில்லை.உணர்வுகள் கட்டாயத்தின் பெயரில் வாராது.அவை இயல்பாக நடக்கவேண்டும்.
போலவே, காதலும்...

அப்புறம்,கூட இருக்குறவங்களுக்கு எல்லாம் வந்தா நமக்கும் வர அதுஎன்ன கொரானாவா ?
எங்க Gang la நான் மட்டுந்தான் single ,இப்ப பாரு எப்படி commited ஆகிக்காட்டுறேனு கட்டாயத்தின் பெயரில் விபரீத முயற்சிகள் வேண்டாம்.தவறாக முடிய வாய்ப்புண்டு.
(Morattu singles  👇👇👇)



One life One love

ஒரு செடி ஒரு பூ...என்ற பழைய புராணங்களை தூக்கி எறியுங்கள்.
முதலில்,நம் வாழத்தான் விருப்பங்கள் எல்லாம். தவிர கடந்து போவதுதான் வாழ்வு.காதல் தோல்விக்கு பின்னும் அன்பும்,காதலும்,வாழ்வும் உண்டு.



One side love

விருப்பமானவரை  பின்தொடர்வதெல்லாம் stalkingல் சேரும்.அது குற்றமாகும்.விருப்பம் இருப்பின் நாகரிகமாக தெரிவியுங்கள்.காதல் என்பது இருவருக்கும் ஏற்படவேண்டும்.
நிராகரிப்பு வந்தால் "ரெமோ" வேலைசெய்து தொல்லைகொடுக்காமல் நகர்ந்து செல்லுங்கள்.அதுவே கண்ணியம்.



Proposals

காதலை வெளிப்படுத்தவதற்கான வாய்ப்புகளும் எளிமைப்படுத்த பட வேண்டும்.Proposals யை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்.ஆனால், கண்ணியமான proposals கள் மதிக்கப்படவேண்டும்.

"உன்ன நல்லா frienda தான் பாத்தேன் , இப்படி பண்ணிடியே"

"அடிஞ்சுருவேன், செருப்பு பிஞ்சுரும்"

என பேசுவதையும்
சம்மந்தப்பட்டவரை அவமானபடுத்துவதையும் தவிருங்கள்.
அது ஒரு விருப்பம்தான்.அதில் ஒன்றும் தவறில்லை.அப்படி ஒரு விஷயத்தை ஒருவர் வந்து உங்களிடம் சொல்வதே உங்கள் வாழ்வின் சிறப்பல்லவா...?



உளவியல் காரணங்கள்

தேடல் - நமக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுப்பதின் அடிப்படையில் ,வாழ்வின் நீண்ட கால துணையைத் தேடும் தேடல்

விருப்பம் - பிடித்த குணமுடைய ,இயல்புடைய ஒருவர் வாழ்வு முழுக்க இருக்க வேண்டும் எனும் பேராசை

பாதுகாப்பு - ஒருவரிடம் பேசும்போது பாதுகாப்பாக உணருவது

பயம் - இனி ஒருவர் இப்படி வாழ்வில் வருவாரா என்ற பயமாகவும் இருக்கலாம்.


சமூகம்

பெற்றோர் - பெற்றோர்களின் லாஜிக்படி

"ஃபோன்,டிரஸ் லாம் என்
விருப்புத்துக்கு வாங்கிலாம்லா.."

"தாராளமாப்பா.."

"இந்தா... கல்யாணம் "

"அது முடியாது பே...அது நாங்க சொல்ற படி தான் நடக்கனும்"..

மெல்ல இந்த சுழல் மாறிக்கொண்டிருந்தாலும், பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் மனநிலை இன்றைக்கு இப்படி தான் இருக்கிறது.பெரும்பாலும் பெற்றோர்கள் பயப்படுவது ஊருக்கும் ... உறவுக்கும் தான்

ஊரும் உறவும்

ஒழுக்கம் ,கட்டுப்பாடு,கௌரவம் என்ன பெயர் சொல்லிக் கொண்டாலும் அதன் அடிப்படையில் இருப்பது சாதி, மதம் முதலிய மனித வெறுப்பும், வேற்றுமைகளுமே!




காதல் , கல்யாணம் போன்றவை எல்லாம் தனிப்பட்ட இருவர் சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். சாதி,மதம்,ஊர்,உறவு ,மயிரு,மட்டை எல்லாம் எதுக்கு அங்கே வருகிறது...?
ஒரு மிகச்சாதாரணமான விஷயத்தை இந்த சமூக அமைப்பு சிரமக்குத்துள்ளாகுகிறது.

பிள்ளைகள் துணை தேடும் விஷயத்தில் தாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.அதுவே எங்கள் கெளரவம்.மீறினால் ,தடுப்போம்,சபிப்போம், ஏன் நடு ரோட்டில் போட்டு வெட்டுவோம் என நினைக்கும் உறவுகளையும், அதற்கு எல்லா விதத்திலும் காரணமாக இருக்கும் சமூகத்தையும் என்னவென்று சொல்வது...?


ஆனால்,மிக உறுதியாக நம்புகிறேன்.
இங்கு சமூக மாற்றம் ஏற்பட, சமத்துவம் ஏற்பட,சாதிக்கொடுமைகள் ஒழிய
காதல் திருமணங்களே சிறந்த வழி.

மொத்தத்தில்,
மனதில் நினைப்பத்தெல்லாம் பேச,
சிரிப்பை மட்டுமல்ல
அழுகையும் பகிரமுடிகிற,
பலம் மட்டுமல்ல
பலவீனமும் அறிந்த,
குறைக்களோடு ஏற்றுக்கொள்கிற,
நான் ஒன்னுமில்லை என்று உங்களுக்கு தோன்றும்போதெல்லாம் அதை தவறு என்று உணர்ந்துகிற,
உங்களுக்கே உங்களை பிடிக்கவைக்கிற,
ரசனைங்கள் ஒத்துப்போகிற,
வாய் திறக்காமலே உங்கள் மொழி புரிந்து கொள்கிற,
உங்கள் விருப்பங்களை
உங்களை விட அதிகமாக
கொண்டாடி தீர்கிற,

ஓர் உறவு
காலம் முழுவதும் உடன் வரும் வாய்ப்பைக் காதல் எனலாம்.

இவ்வளவு சொன்ன பின்பும் ஓரே ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது...!..




"ஆமா ...lov னா என்னங்கையா....?
(That's the beauty...)
.                                                - அரவிந்த் ரகு

2 comments:

நாலு வார்த்தை சொல்லிட்டுபோங்க...

காதல் எனப்படுவது யாதெனில்..!

  ( Disclaimer -காதல் என்பது இதுதான், அதன் அறிகுறிகள் இதுதான் என்று யாராலும் வரையறுக்க முடியாது. அப்படி பொதுவாக வரையறுப்பது, சரியாகவும் இரு...